உள்நாட்டு செய்தி
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் முன்மொழிவை இந்த வாரத்திற்குள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு சுமார் 30 ரூபாவாகும் எனவும், தற்போது இந்நாட்டின் நாளாந்த முட்டை உற்பத்தி 5.8 மில்லியன் முட்டைகள் எனவும், நாளாந்த முட்டை நுகர்வுத் தேவை 7.5 மில்லியன் முட்டைகள் எனவும் வலியுறுத்தப்பட்டது.தற்போது 130,000 அடுக்கு தாய் கோழிகள் உள்ளது போதும் குஞ்சுகள் மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிக்காததன் காரணத்தை கண்டறியுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.