உள்நாட்டு செய்தி
மேல் மாகாண பரீட்சைகள் இடைநிறுத்தம்
மேல் மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் இன்று முதல் நடைபெற உள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06) முதல் மீண்டும் நடைபெறுகின்றன.
பரீட்சைக்கு முன்னதாக அறிவியல் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனவே தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.