உள்நாட்டு செய்தி
இந்திய மீனவர்களை இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொலைபேசி உரையாடலின் போது கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தொலைபேசி உரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை, குறிப்பிட்ட காலத்திற்கு இலங்கை கடற்பகுதியில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, தமிழக கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் வரமாட்டார்கள் என தமிழக அரசு உறுதியளித்த பின்னரே மீன்பிடி விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய-இலங்கை மீனவ பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான கோரிக்கைக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடைசியாக இந்த பிரச்சினை மார்ச் 2022 இல் விவாதிக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக இலங்கைக் கடலுக்குள் நுழைந்து ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கைக் கடலுக்குள் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் சமீபத்தில் தண்டனை விதித்தது.