உள்நாட்டு செய்தி
பாடசாலை வேன் மோதி 4 வயது சிறுவன் பலி
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு வித்தியாலய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் மோதி சிறுவன் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்