உள்நாட்டு செய்தி
342 மில்லியன் சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானம்
கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவான மாதம் ஒன்றின் அதிகூடிய சுற்றுலாத்துறை வருவாய் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் 269 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானமாக ஈட்டப்பட்டிருந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.