உள்நாட்டு செய்தி
ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு…!
எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஹாலி எல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.