உள்நாட்டு செய்தி
விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு: விமானங்கள் தாமதம்
இன்று காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் ஊழியர்கள் சில கடமைகளை செய்யாத காரணத்தால் நான்கு ஸ்ரீலங்கன் விமானங்கள் தாமதமாக வந்துள்ளன.
ஊழியர்கள் காலை 4:30 மணிக்கு தங்கள் பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததைத் தொடர்ந்து இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பணியைத் தொடர்ந்தனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் உள்ள திறமையின்மைக்கு உடனடி தீர்வைக் கோரி விமான நிலைய ஊழியர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.