உள்நாட்டு செய்தி
நிதி மோசடி செய்த சீன பெண் கைது…!
8.4 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிதி மோசடி செய்த சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 31ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து நேற்று கொள்ளுப்பிட்டியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சீனப் பிரஜையான குறித்த பெண் தற்போது கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்