Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையை உலுக்கிய கோர விபத்து: பொலிஸார் வெளியிட்ட தகவல்

Published

on

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக இரு பிள்ளைகளுடன் தாய் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த 41 வயதான தாய் ஷாலிகா தில்ருக்ஷி, ஒன்பது வயது மகள் சிதுமி சாவிந்தி ஜயலத் மற்றும் ஏழு வயது மகன் சசன் மந்துல ஜயலத் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து: பொலிஸார் வெளியிட்ட தகவல் | Train Accident 3 Dies Police Reveled Details

உயிரிழந்த சிதுமி 4ஆம் வகுப்பும், சசனின் மகன் 2ஆம் வகுப்பும், இவர்களது தந்தை அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் எனவும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ​​ரயில் இயங்கினாலும் கடவை மூடப்படவில்லை எனவும், அப்போது கடவை நடத்துநர் அங்கு இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தாய் கவனமாக இருந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்த பொலிஸ் அதிகாரி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *