உள்நாட்டு செய்தி
அரச நிறுவனங்களில் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
அரச நிறுவனங்களின் சில பொறுப்பான அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் வினைத்திறன் அற்றவர்களாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி செயற்படுவதாகவும் அரச உத்தியோகத்தர்கள் தமது தனிப்பட்ட விருப்புக்கேற்ப செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே அரச நிறுவனங்களில் இந்த நிலைமைகளை தடுக்கும் வகையில் மக்களுடன் நெருக்கமாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று நேற்று (19) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.