உள்நாட்டு செய்தி
கொழும்பு பிரதான தொடருந்து சேவை பாதிப்பு
பிரதான பாதையில் தொடருந்து சேவைகள் மேலும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவை தடங்கல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (19.2.2024) காலை பயணித்த ‘உடரட மெனிகே’ தொடருந்து ராகம நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இந்நிலையில், தடம் புரண்ட தொடருந்து தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டதாகவும், தண்டவாளம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தொடருந்து தண்டவாளம் சீரமைக்கப்படும் வரை தொடருந்து தாமதமாகும் என தொடருந்து திணைக்களத்தின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.