உள்நாட்டு செய்தி
மருந்துகள் தொடர்பான தவறுகளை கண்டறியும் டிஜிட்டல் முறை அறிமுகம்
மருத்துவம் மற்றும் சாதனப்பதிவுக்காக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தவறான விடயங்களை கண்டறியும் பூல்ப்ரூப் டிஜிட்டல் மயமாக்கல் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்காக ஆணையகம், சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக ஆணையகத்தில் காப்புப்பிரதி இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு டெராபைட் தரவுகள் மர்மமான முறையில் காணாமல்போனமையை அடுத்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, குறிப்பாக 16 நாடுகளில் செயல்படும் அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனம், தற்போது இந்த விடயத்தை முன்னகர்த்தி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும், ஊழலைக் குறைப்பதற்கும், பொதுவாக, கோப்புகளை விரைவுபடுத்துவதற்கும் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் டிஜிட்டல் முறை அவசியம் என்பது நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் என்.ஆர்.எம்.ஏ என்ற மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், இந்த செயல்முறையை மேற்பார்வையிடவும், சேவை வழங்குநரால் வழங்கப்படும் இரண்டாம் நிலை காப்புப்பிரதியைப் பெறவும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆணையகத்தின் தரவுகள் காணாமல்போனது தொடர்பான குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணை வழக்குத் தொடரப்படாமல் தொடர்கின்றது.
இரண்டு டெராபைட் தரவுகள் அல்லது 2,000 ஜிகாபைட் அளவுள்ள இரகசியத் தகவல்கள் காணாமல்போனமை தொடர்பாக உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காணாமல்போன இந்த தரவுகளில் என்.எம்.ஆர்.ஏ வழியாக மருந்து நிறுவனங்கள் பதிவேற்றிய பதிவு விண்ணப்பங்கள் மற்றும் பிற துணை ஆவணங்களுடன் மருந்து சூத்திரங்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் இருந்துள்ளன. துரதிஸ்டவசமாக அந்த தகவல்களுக்கு காப்புப் பிரதி எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது