உள்நாட்டு செய்தி
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில்
நிதியமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
அதன்படி நாளை காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று நிதியமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலை நடத்திய போதிலும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில் பணிப்புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.