உள்நாட்டு செய்தி
இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்
இலங்கையில் பெண்கள் மீதான தவறான நடத்தைகள் மற்றும் இளம் பராய கர்ப்பம் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், விசாரணை மற்றும் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் துறை பரிசோதகர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த இந்நிலையானது பெண்கள் மற்றும் குழந்தைகளை குறி வைக்கும் இணைய அடிப்படையிலான குற்றங்களின் அபாயகரமான அதிகரிப்பை இது எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும்.பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் பொறுப்பான நடத்தையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நிர்வாண புகைப்படங்கள் உட்பட ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை இணையங்களில் வெளியிடுவதற்கான அச்சுறுத்தல்கள் குறித்து இரகசியமான மற்றும் உடனடி முறைப்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என்றும் பிரதி பொலிஸ் துறை பரிசோதகர் ரேணுகா ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்