உள்நாட்டு செய்தி
மூன்று முக்கிய கொடுப்பனவுகளை அரசாங்கம் அதிகரித்தது
சிரேஷ்ட பிரஜைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை 7,500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபா உதவித்தொகை 3,000 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகைகளுக்குள் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரிப் பலன்களைப் பெறுபவர்கள் ஏப்ரல் 01, 2024 முதல் அதிகரிப்பைப் பெறுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.