உள்நாட்டு செய்தி
கந்தகாடு புனர்வாழ்வு:நிலையம்: பொருத்தமற்ற நபர்கள் விலக்கப்படுவார்கள்
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி,அறிவித்துள்ளார்.
புனர்வாழ்வுக்கு பொருத்தமற்றதாகக் கருதப்படும் நபர்களை இனிமேல் நிலையங்களுக்குள் வைப்பதைத் தவிர்ப்பதாக ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.
அண்மையில் கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்களைத் தூண்டும் வகையில் ஈடுபட்ட 34 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த கொள்கை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதிப்படுத்தியபடி, குழு பல குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.
ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் வன்முறைச் செயல்களுக்கு பங்களித்த அனைத்து நபர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
தனிநபர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கான நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதில் தனது எச்சரிக்கையான அணுகுமுறையை மேலும் வலியுறுத்தியுள்ளார்.
புனர்வாழ்வுக்குத் தகுதியானவர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவதை இது உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.