உள்நாட்டு செய்தி
நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்
களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை மற்றும் ஹெரோயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சந்தேகநபர் பொலிஸ் ஜீப்பில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் கதவைத் திறந்ததும் அவருடன் கைவிலங்கிடப்பட்ட மற்றைய சந்தேகநபர் முகத்தில் தாக்கி கைவிலங்குகளை கழற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நீதிமன்றில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் அவர்களை துரத்திச் சென்ற போதும் சந்தேக நபர் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக அளுத்கம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.