உள்நாட்டு செய்தி
இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம்!
காலிமுகத் திடலில் இன்று (04) இடம்பெற்ற இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.
இராணுவ அணிவகுப்புக்குப் பின்னரான வழமையான கலாசார அணிவகுப்பு இம்முறை இடம்பெறாததுடன், இலங்கையின் சகல கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சுதந்திர விழாவில் குறுகிய கலாசார அணிவகுப்பு மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்தது.