உள்நாட்டு செய்தி
மத்துகமவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை..!
இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மத்துகம, ஓவிட்டிகல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய நபரே வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரும் அவரைத் தாக்கினார் எனக் கூறப்படும் சந்தேகநபரும் நெருங்கிய உறவினர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியவர் எனக் கூறப்படும் 27 வயதுடைய சந்தேகநபர்,
தாக்குதலின் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.