உள்நாட்டு செய்தி
தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ள வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம்
எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (03.02.2024) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,
“ஏனைய அரச அதிகாரிகளை போலவே எங்களுடைய வருடாந்த இடமாற்றமும் நல்லமுறையில் இடம்பெறவேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஆனாலும், ஒரு சில அதிகாரிகள் பாரபட்சமாக எங்களுடைய சாரதிகளின் இடமாற்றத்தை தடுப்பது எங்களுக்கு வருத்தமளிக்கின்றது” என தெரிவித்துள்ளார்