உள்நாட்டு செய்தி
கடன் தொல்லையால் இரு பிள்ளைகளின் தந்தை தற்கொலை..!
தம்புள்ளை, மாகந்தென்ன பிரதேசத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை கடனாக பெற்றிருந்த நிலையில் கடனை அடைப்பதற்காக ஒரு மாதத்திற்கு தலா 34,000 ரூபாவை வழங்குவதாக குறித்த நிறுவனத்திடம் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் இவரது வியாபாரமும் தோல்வியடைந்த நிலையில் வருமானம் இன்றி காணப்பட்டுள்ளது.
பல நாட்கள் கடந்தும் கடனாக பெற்ற பணத்தை கொடுக்காததால் குறித்த நிறுவன ஊழியர்கள் இவரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட இவர் தனது வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.