உள்நாட்டு செய்தி
நேற்று மது போதையில் இருந்த இளைஞன் இன்று சடலமாக மீட்பு..!
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.