Connect with us

Sports

அவுஸ்திரேலியா ஓபன்: இறுதிப் போட்டியில் ஜெனிபர் பிராடி ஒசாகாவுடன் மோதல்

Published

on

அவுதிஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்கோவாவை வீழ்த்தி அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் பிராடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று (18) நடைபெற்றன.

முதல் போட்டியில் போட்டியில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி செக்குடியரசின் கரோலினா முச்கோவாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை ஜெனிபர் பிராடி 6-4 எனக் கைப்பற்றினார்.

ஆனால் 2 ஆவது செட்டை 3-6 என இழந்தார்.

வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற ஜெனிபர் பிராடி இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார்.