உள்நாட்டு செய்தி
வவுனியாவில் பெருந்தொகை வெடிப்பொருட்களுடன் கைதான சந்தேகநபர் TID வசம்

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே, இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு − ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த 32வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்