உள்நாட்டு செய்தி
வருண் பிரஜிஷின் இறுதிக் கிரியைகள் இன்று

கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல்நாள் பாடசாலை செல்லும்போது கோர விபத்தில் பலியான பதுளை கனிஷ்ட சரஸ்வதி வித்தியாலய முதலாந்தர மாணவன் 6 வயதான சி.வருண் பிரஜிஷின் பூதவுடல் அஞ்சலிக்காக பதுளை அசேலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பி.ப 2.00 மணிக்கு சொந்த ஊரான கவரகெல தோட்ட பொது மயானத்தில நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
உயிரிழந்த வருண் பி்ரதீஸின் பூதவுடலிற்கு பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் தமது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்