உள்நாட்டு செய்தி
ஏப்ரல் வரை முட்டை இறக்குமதிக்கு அனுமதி..!
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
இதன்படி எதிர்காலத்தில் ஒரு முட்டை வாடிக்கையாளருக்கு 35 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சந்தையில் முட்டையின் விலை அசாதாரணமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் முட்டை விலையை காலவரையரையின்றி உயர்த்தினால், அரசாங்கத்தின் பதிலில் மாற்றம் ஏற்படாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், எதிர்காலத்தில் மேலும் சில பொருட்களின் விலை குறையும் என்றும் அமைச்சர் கூறினார்.