Connect with us

உள்நாட்டு செய்தி

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

Published

on

லங்கா சதொச நிறுவனத்தினால் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் குறித்த பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பால் மாவின் விலை 10 ரூபாயினாலும் , இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) 55 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு நாட்டு அரிசி 08 ரூபாயினால், வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் கொண்டைக் கடலையின் விலை 05 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.