உள்நாட்டு செய்தி
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி பாகங்களின் விலைகள் அதிகரிக்கும்..!
நாட்டில் பெறுமதி சேர் வரி (VAT – வற்) 18% சதவீதமாக அதிகரிக்கப்பட்ட பின்னர் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி பாகங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என,
இலங்கை தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவிக்கையில் ,
இவ்வாறு அதிகரிக்கப்படும் பொருட்களின் விலைகள் தொடர்பில் இலங்கை தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானிக்க முடியாது.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொலைபேசியின் பாகங்களின் விலை அதிகரிக்கப்படுவதால் நுகர்வோர் மாத்திரம் அல்ல விற்பனையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசிகள் அடிப்படை தேவையாக மாறிவிட்டதோடு அதன் துணைக் கருவிகள் மற்றும் பாகங்கள் முக்கியமான பொருட்களாக காணப்படுகின்றன.
கையடக்கத் தொலைபேசிகளின் விலை உயர்வுக்கு பின்னர் பாடசாலை பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும் இதனால் கல்வித்துறையும் பாதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.