உள்நாட்டு செய்தி
ஷானி அபேசேகர மீதான படுகொலை முயற்சி: அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகர மீதான படுகொலை முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன, இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விபத்து ஒன்றில் அபேசேகர கொல்லப்படவிருந்ததாக ஏஜிஸ் திணைக்களப் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானிக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.
இந்த நிலையில் பொலிஸ் அலுவலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டால், சட்டமியற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே சட்டமா அதிபரை சபைக்கு வரவழைத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளின் துல்லியம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்குமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்