உள்நாட்டு செய்தி
ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.800
ஒரு கிலோ கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு வழங்க முடியும் என்ற நிலை இருந்தும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் வருந்துவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்படுமாயின் மக்கள் இவ்வாறான சுரண்டலுக்கு ஆளாக மாட்டார்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
தற்போது சந்தையில் சகல உணவுப் பொருட்களின் விலையும் வேகமாக அதிகரித்து 800 ரூபாவிற்கு கிடைக்கும் என கூறப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 1200 ரூபாவாக அதிகரித்துள்ளது.