உள்நாட்டு செய்தி
புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட வேண்டும்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவில் 99 வீதமான மாணவர்கள் அழுததாகவும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் வினாத்தாள் பிள்ளைகளுக்கு கடினமாக இருப்பதாக முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையும் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.