உள்நாட்டு செய்தி
திருகோணமலையி்ல் சட்டவிரோத போதைப்பொருளுடன் இளைஞர் கைது
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த இளைஞன் இன்று (02.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 05 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா – மாஞ்சோலை வீதியில் வசித்துவரும் ஹதரஸ்கொடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் சார்ஜனின் 24 வயதுடைய மகன் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபர் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த இடத்தில் இருந்து தப்பி ஓடியவர் எனவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்