உள்நாட்டு செய்தி
நாட்டை கட்டியெழுப்பும் திட்டமொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானம்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாட்டை கட்டியெழுப்பும் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி இந்த திட்டம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பல்வேறு தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் அரசியல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆண்டுகளில் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கு பொருந்தக்கூடிய முன்மொழிவுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதில் வரும் 15 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.