உள்நாட்டு செய்தி
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருட இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தருவார்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக அந்த அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் நாட்டுக்கு 1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகைத் தருவார்கள் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், கடந்த நவம்பர் மாதம் சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாக 1.75 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது.