Connect with us

உள்நாட்டு செய்தி

400 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர்..!

Published

on

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கோப்பி பயிரிட தீர்மானித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு கோப்பி பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கியதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் தற்போது பிரதான தோட்டப் பயிராக கோப்பி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாவிட்டாலும், இந்த நாட்டு கோப்பிக்கு வெளிநாட்டுச் சந்தையில் காணப்படும் அதிக கிராக்கியை கருத்திற்கொண்டு, கோப்பி பயிர்ச்செய்கையை பிரபலப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, ஒரு ஹெக்டேருக்கு ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதுடன், கோப்பி செய்கையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக 2024 ஆம் ஆண்டிற்கு 96 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பணத்தை வினைத்திறனாகவும் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நம் நாடு கோப்பி செய்கைக்கு பிரபலமானது மற்றும் Coffea Arabica (Coffea Arabica ), Coffea Canephora (Robusta coffee) மற்றும் Libarica coffee வகைகள் நம் நாட்டில் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் Arabica கோப்பி மிகவும் பிரபலமான கோப்பி வகையாகும். மேலும் அந்த கோப்பி வகைக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஏற்றுமதி விவசாய துறைக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Arabica கோப்பி பல புதிய வகைகள் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை HTD, S09, Katimur, Lakparakum, Lak Saviru and Lak Komali என அழைக்கப்படுகின்றன. இந்த வகைகள் அதிக விளைச்சல் தரும் வகைகளாகும்.

இவற்றுக்கு மேலதிகமாக Robusta கோப்பியின் பல உள்ளூர் இனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை IMY, S274, GCR, CCI, லங்கா சந்திரா, லங்கா பிம்சரா மற்றும் லங்கா இசுரு என்பனவாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *