உள்நாட்டு செய்தி
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி !
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அலுவகத்தில் பணியில் இருந்த வேளை மின்சாரம் தாக்கியதாகவும் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.