உள்நாட்டு செய்தி
மகாவலி கங்கையில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு
மகாவலி கங்கையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன