உள்நாட்டு செய்தி
மட்டக்களப்பில் அம்பிடடிய சுமணரடண தேரர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை
மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிடடிய சுமணரடண தேரர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை இருவருக்கு பிடிவிறாந்து வளங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் இன்று திங்கட்கிழமை (27) குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்
மேலும் நீதிமன்றிற்கு சமூகமளிக்காத 2 பேருக்கும் பிடிவிறாந்து உத்தரவிட்டு அடுத்தவருடம் மார்ச் 18 வழக்கை தவணையிட்டு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7ம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்பு சாந்தா புனித மிக்கேல் ஆண்கள் தேசிய பாடசாலை 150 வருட நிறைவு விழாவின் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஜயம் செய்திருந்தார்.
ஜனாதிபதியின் மட்டக்களப்பு வருகையை எதிர்த்து தேரர் உட்டபட குழுவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்களுக்கு நீதிமன்ற கட்டளை ஒன்றை பொலிஸார் கேரியிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றம் வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதித்ததுடன் அதனை மீறி வீதியை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் போக்குவரத்து விதிமுறையின் கீழ் அவர்களுக் எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவும் என நீதிமன்றம் கட்டளை வழங்கியது.
மட்டு. விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தலைமையிலான மேச்சல் தரை மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத குடியேற்றவாசிகள் கொண்ட குழுவினர் கல்லூரிக்கு உட்புகுவதற்கு முயற்சித்த போது அவர்களை பொலிஸார் வீதிதடைகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியதுடன் நீதிமன்ற கட்டளையை தெரிவித்த நிலையில் அதனை மீறி வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நீதிமன்ற கட்டளையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமணரட்ண தேரர், உட்பட இரு தேரர்கள் மற்றும் 6 பேருக்கு எதிராக மட்டு தலைமையக பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதின்றில் வழக்கு தாக்குதல் செய்தனர்.
இந்த வழக்கு மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அம்பிட்டய தேர் உள்ளிட்ட 6 பேரையும் இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்ததுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாக்கு மூலத்தை பதிவு செய்யுமாறும் நீதிமன்றிற்கு சமூகமளிக்காத இருவரையுக்கு பிடியானை பிறப்பித்து எதிர்வரும் மாச் மாதம் 18ம் திகதி வழக்கை பிற்போட்டுள்ளார்.