உள்நாட்டு செய்தி
டிசம்பர் மாதம் முதல் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா!
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலவச விசா அனுமதி வழங்கப்படும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த இலவச விசா அனுமதி எவ்வளவு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்படவில்லை. மலேசிய அரசாங்க தகவல்களின் படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாத காலப்பகுதியில் மலேசியா 9.16 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை பதிவு செய்துள்ளது.
அவர்களில் சீனாவிலிருந்து 4 இலட்சத்து 98 ஆயிரத்து 540 பேரும், இந்தியாவில் இருந்து 2 இலட்சத்து 83 ஆயிரத்து 885 பேரும் அடங்குகின்றனர்.