உள்நாட்டு செய்தி
மாணவி கடத்தல் சம்பவம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது !

பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்திச் செல்வதற்கு உதவி புரிந்த பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் களுத்துறை கிதுலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகுறித்த மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பாடசாலை மாணவர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த மாணவி களுத்துறை – ஹீனடியன்கல பகுதியில் வைத்து நேற்று கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.