உள்நாட்டு செய்தி
வரி விதிக்கப்படாத 100 பொருட்களுக்கு VAT விதிப்பு..!
முன்னர் வரி விதிக்கப்படாத பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்., 2024 வரவுசெலவுத் திட்டத்தில் பெறுமதி சேர் வரியை 15-18% இலிருந்து அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.முன்னர் வரி செலுத்தப்படாத பொருட்களுக்கு இப்போது VAT விதிக்கப்படும் என்றும், எரிபொருள், எரிவாயு மற்றும் உரத்திற்கும் VAT விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகள், கணனிகள் இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட முன்னர் வரி விதிக்கப்படாத 100 பொருட்களுக்கு VAT விதிக்கப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.“ வரவு செலவுத் திட்டம் 2024 அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் VAT விதிக்க முன்மொழிகிறது. தேசிய மென்பொருள், தேயிலை இலைகள் மற்றும் மரப்பால் போன்ற பல பொருட்களுக்கும் VAT விதிக்கப்படும். எனினும், ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையின் போது இவை எதனையும் குறிப்பிடவில்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது ஒரு நியாயமற்ற நடவடிக்கை என தாம் நம்புவதாகவும், மேலும் VAT எவ்வாறு விதிக்கப்படும் மற்றும் பணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.