Connect with us

உள்நாட்டு செய்தி

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை

Published

on

பெட்ரோல், டீசல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான விளம்பரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடட் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் தொடர்பில் சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடட் இந்த விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 92 ரக டீசல் மற்றும் பெட்ரோல் தொகையுடன் வரும் எம்.டி.ஃபோஸ் பவர் கப்பல் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி அதிகாலை கொழும்பு துறைமுகத்தில் கரையொதுங்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை | Special Report On Petrol Diesel

ஆய்வக பரிசோதனையின் போது 92 பெட்ரோல் தரநிலைக்கு இணங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

டீசல் தொகையின் பரிசோதனை இன்னும் நடந்து வருவதால், முடிவைப் பொறுத்து, அவற்றை இறக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *