உள்நாட்டு செய்தி
கொழும்பில் கடும் மழை! வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகள்
கொழும்பில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக, கொழும்பு ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், கடும் காற்று, இடியுடன் கூடிய மழை காரணமாக கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பல பகுதியில் மரங்கள் சறிந்து வீழ்ந்துள்ளன.
கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
கொழும்பில் பெய்யும் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக பல பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.