உள்நாட்டு செய்தி
பேருந்து மோதியதில்வீதியோரம் நடந்து சென்ற பெண் பலி…!
குருணாகல் பொலிஸ் பிரிவில் புத்தளத்திலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் படுகாயமடைந்த பெண் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குருணாகல் புத்தளம் வீதியில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.