உள்நாட்டு செய்தி
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 55 வயது வரை கொடுப்பனவு
கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது 55 வயது வரை வேதனம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையின் அனுமதிக்கமைய கடமையின்போது மரணமடைந்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளின் பதவி நிரந்தரமாக்கப்பட்டதுடன் நேற்று முதல் பொலிஸ் சார்ஜன்டாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.அத்துடன், அவரது பெற்றோருக்கு அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபாவும், பொலிஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் 25 ஆயிரம் ரூபாவும் நேற்று வழங்கப்பட்டது.