உள்நாட்டு செய்தி
வாகன சாரதிகளுக்கான அறிவுறுத்தல் !
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அதிக மழையுடனான வானிலை காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வீதி போக்குவரத்து அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.அதிவேக வீதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே, அதிக மழையுடனான வானிலை காரணமாக பல்வேறு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால், அந்த வீதிகளைப் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய தடைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்கள் மற்றும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.