உள்நாட்டு செய்தி
நாணய கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கை வர்த்தமானியில்….
நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட நாணய கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இலங்கை மத்திய வங்கியானது காலாண்டு முதன்மைப் பணவீக்க வீதத்தை 5 சதவீத இலக்கில் பேணுவதனை செயல்நோக்காக கொள்ளவேண்டும் என அந்த உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில், அண்மையில் நாணய கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதுடன், புதிய மத்திய வங்கியின் சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தநிலையில், குறித்த உடன்டிக்கைக்கு நாட்டின் பணவீக்கம் தொடர்பில் அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் உடன்பட்டுள்ளது.அத்துடன், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 5 சதவீதத்தில் காணப்படவேண்டும் எனவும் குறித்த உடன்படிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.