உள்நாட்டு செய்தி
பதுளையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட ஒருவர் கைது
பதுளை – தனமல்வில பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 4,340 கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் எம்பிலிபிடிய பகுதியை சேர்ந்த 68 வயதுடையவர் என்பதுடன், தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரைணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.