உள்நாட்டு செய்தி
கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள்
கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், 16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியான முக்கிய தகவல்122 மில்லியன் ரூபா பெறுமதிஇந்த மருந்துகள் மூன்று மரப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.மேலும், குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 122 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.