உள்நாட்டு செய்தி
தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் !
ஒருகொடவத்த பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்களும் 34 அதிகாரிகளும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இன்று காலை 6.20 அளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கருவாப்பயிர் சார்ந்த உற்பத்தி செயற்பாடுகள் இடம்பெறும் தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.